15 நவம்பர், 2010

மனிதன் VS எந்திரன் PART-02


இன்றைய காலகட்டங்களில் மனிதப்போலிகள் என அழைக்கப்படும் Humanoidகளின் அபரிமிதமான வளர்ச்சி மனிதஇனத்தையே அச்சுறுத்துவதாக அமைந்து கொண்டிருக்கிறது..இந்த நிலையை தற்போது வெளிவந்த தலைவரின் எந்திரன் உட்பட பல ஆங்கில திரைபடங்களும் படம்பிடித்து காட்டியிருக்கினறன..எனினும் தற்காலங்களில் இது சாத்தியமான நிலைதான. வேலைத்தளங்களில் கருமங்களை ஆற்றுவதற்காக உபயோகப்படுத்தப்படும் மனிதப்போலிகளின் மூலம் வேலையின் பெறுபேற்றில் துல்லியம் வினைத்திறன் மிக்க பலன்,நீடித்த பயன்பாட்டுத் தன்மை,என்பன அதிகரித்துள்ளன.ரோபோக்களை விட 
மனிதர்களால் காரியங்களை செய்ய முடியுமானாலும் சோம்பல்,களைப்பு போன்ற தன்மைகள் மனிதர்களால் செய்யப்படும் காரியத்தின் வினைத்திறனை பாதிக்கும்.ஆனால் இது ரோபோ தொடர்பில் இல்லவே இல்லை.
கைத்தொழிற்துறையில் சம்பந்தப்பட்ட பல தொழிற்சாலைகளில் ரோபோக்கள் பல காரியங்களை செய்வதற்காக அதிகளவில் பாவிக்கப்பட்டு வருகின்றது.உலகளவில் மிகவேகமாக மனிதப்போலிகளின் வியாபிப்பு பரவி வருகிறது.சுமார் 800,000 ரோபோக்கள் உலகளவில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 42சதவீதம் ஜப்பானிலும் 40சதவீதம் ஐரோப்பாவிலும் மற்றும் 18சதவீதம் ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகின்றன.கார் தயாரிப்பு,பொதி செய்தல்,இலத்திரனியல் கூறுகள் பொருத்துகை என பல நிலைகளில் பயன்படுத்த ரோபோக்கள் இப்போது ஆடம்பரமாக சில செல்வந்தர்களின் வீடுகளிலும் பயன்னடுத்தப்படுவது
கண்கூடு,

இதே போல மனிதனால் செய்யச் சிரமமான பல காரியங்களை செய்யும் தகவுடைய ரோபோக்களும் பாவனையுள்ளன.இது இவ்வாறிருக்க இராணுவ நடவடிக்கைகளிலும் மிகவும் நுணுக்கமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இராணுவ ரோபோக்கள் பயன்படுத்தப் படுகின்றன.ஜப்பான் போன்ற நாடுகளில் முதியோர்களை கவனிக்கும் பணியில் கூட ரோபோக்கள் ஈடுபடுகின்றமை ஒரு மென்மையான செய்திதான்...

ரோபோ கண்டுபிடிப்பு உருவாகி பல தசாப்தங்களுக்கு பின்னர் ரோபோக்களுக்கு மனித உணர்வுகளை வழங்கும் நடவடிக்கை மீதான ஆர்வம் விஞ்ஞானிகளிடம் வலுப்பெற்றது.இதனால் பல உயிர்பான மனித உணர்வுள்ள மனிதப்போலி உருப்படிகள் அடிக்கடி தோன்றத்தொடங்கின.தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிலையங்களில் கடமையாற்றும் மனிதப்போலி ரோபோக்களின் தொழிற்பாடு மனிதனோடு இடைத்தாக்கம் கொண்டதாக காணப்பட்டது.இதனால் மனிதனோடு இடைத்தொடர்பாடும் வலிமை கொண்ட நிலையில் மனிதப்போலிகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உருவானது.

மனிதப் போலிகளின் உருவாக்கமா???  பகுதி-03 இல் காத்திருங்கள்..


கருத்துகள் இல்லை:

Share With your friends