28 மார்ச், 2010

கூகிளில் Alerts உருவாக்குவது எப்படி?




கூகிள் அலர்ட்ஸ் எனப்படுவது முற்றிலும் இலவசமான ஓர் சேவையாகும்.அதாவது வளர்ந்துள்ள தற்கால தகவல் தொழில்நுட்ப உலகில் எய்தப்படும் மாற்றங்கள் பற்றி உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த சேவையை செயற்படுத்தலாம்.இதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் பெட்டி மூலமாகவே இணையத்தில் புதுப்பிக்கப்படும் செய்திகளையும் அறிந்து கொள்ளலாம்.இதற்கு முதலில் www.google.com/alerts என்ற தளத்திற்கு சென்று அங்கு உள்ள படிவத்தை நிரப்ப வேண்டும்.அதில் Search terms என்பதற்கு நேரே நீங்கள் Alerts பெற விரும்பும் விடயத்தை குறிப்பிடலாம்.உதாரணமாக நீங்கள் இலங்கை செய்திகள் பற்றி அலர்ட்ஸ் பெற விரும்பினால் srilankan news என வழங்கலாம்.பின்னர் Type என்பததற்கு நேரே குறித்த விடயம் தொடர்பான Alerts செய்தியிலா அல்லது இணையத்தளத்திலா அல்லது இரண்டிலுமா அல்லது குழுக்களிலா என்பதனை தேர்வு செய்யவும். பின்னர் Alerts தேவைப்படும் நேரங்களை How often என்பதற்கு நேரே ஒரு நாளைக்கு ஒரு தரம் அல்லது குறித்த விடயம் நடைபெறும் தருணத்தில் அல்லது வாரமொரு முறை என்ற தெரிவுகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.இவற்றையெல்லாம் வழங்கிய பின்னர் இறுதியாக உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கி Create alert என்ற பட்டனை ஐ அழுத்த உங்களுக்கான Alerts தயாராகிவிடும் நீங்கள் வழங்கிய தெரிவுகளுக்கேற்ப விடயங்களுக்கான Alerts உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே வந்து சேரும்.முயற்ச்சித்து பாருங்கள்.....

தொகுத்து தந்தவர்
-A.Shanojan

கருத்துகள் இல்லை:

Share With your friends