24 மார்ச், 2010

இணையத்தில் குவிந்து கிடக்கும் இமேஜ் வியூவர்கள் பாகம்-02

No 15 Irfan view(இர்ஃபான் வியு)

15 வகை இமேஜ் ஃபார்மட்களுக்கு கன்வெட்டர் உள்ளது.Blur,Emboss போன்ற 33 வகையான இமேஜ் எஃபெக்ட்கள் உள்ளன.ப்ளக்இன்கள் மூலம் மீடியாப்ளயர்,ஃப்பில்டர் போன்ற வசதிகளை இணைக்க முடியும்.ஸ்கிரீன்கேப்சரிங் மென்பொருள்
இணைந்துள்ளது.100க்கும் மேற்பட்ட ஃபார்மட்களை ஆதரிக்கும்.இதன் தனிச்சிறப்பு என்னவெனில் 46 வகையான ப்ளக்இன்கள் இதன் இணையத்தளத்தில் உள்ளன.அனைத்தையும் பதிவிறக்கி இதனுடன் இணைத்துக் கொண்டால் பல மேம்பட்ட
வசதிகள் இந்த இர்ஃபான்வியு மூலம் நமக்கு கிடைக்கும்.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
கிடைக்கும் தளம்-www.irfanview.net
ஃபைல் அளவு-0.98 எம்பி


No 14 IMGSEEK(ஐஎம்ஜிசீக்)
இமேஜ்களை குட்டிப்படங்களாக பார்க்க இயலும்.Fullscreen view,Slideshow வசதிகள் இதில் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.நமது கணினியில் உள்ள இமேஜைத் தேடுவதற்கு தேடல் வசதி உள்ளது.இமேஜ்களை எச்டிஎம்எல் ஆல்பமாக மாற்றி அதை
இணையத்தில் பயன்படுத்துவதற்கேற்றதாக Create HTML Album எனும் வசதி உள்ளது.எச்டிஎம்எல்லாக மட்டுமல்ல XML,CSV ஃபைல்களாகவும் கூடமாற்ற இயலும்.இதற்காக எக்ஸ்போர்ட் மெட்டாடேட்டா என்ற ஆப்ஷன் உள்ளது.
இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
கிடைக்கும் தளம்-www.imgseek.sourceforge.net
ஃபைல் அளவு-4.77 எம்பி


No 13 Coffee cup(காஃபி கப்)

இணையத்தில் குட்டிப்படப் பக்கங்களை உருவாக்க இந்த காஃபிகப் மென்பொருள் உதவுகிறது.கணினியில் உள்ள படங்களை தேடவும்,இணையத்தில் அப்லோட் செய்யவும் இதில் வசதிகள் உள்ளன.இமேஜ்களை சுருக்கிசேமிக்கும்(Compress)வசதி
உள்ளிணைக்கப்பட்டுள்ளது.கன்வட்டர்,ஃபில்டர்,ஃசூமிங் டூல்கள் உள்ளன.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
கிடைக்கும் தளம்-www.coffeecup.com
ஃபைல் அளவு-4.97 எம்பி


No 12 Focus viewer(ஃபோக்கஸ்வியுவர்)

21 வகையான எஃபெக்ட்களுடன் கூடிய இமேஜ் எடிட்டர் ஒன்று உள்ளது.Crop,Resize,Bestfit போன்ற எடிட்டிங் வசதிகளும் உள்ளன.ஸகிரீன் ஷார்ட்கள் எடுக்க்கூடிய ஸ்கிரீன் கேப்சர் வசதி உள்ளது.
இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
கிடைக்கும் தளம்-www.focussoft.net
ஃபைல் அளவு-1.43 எம்பி


No 11 Dimin viewer(டிமின் வியூவர்)

இமேஜ் கன்வர்ஷன் வசதி உள்ளது.ஸ்லைடுஷோ,ஃபில்டர் போன்ற ஆப்ஷன்கள் உள்ளன.அனிமேட்டட் இமேஜ்களை உருவாக்க இயலும்.Image information வசதி உண்டு.அடிப்படை எடிட்டிங் வசதிகளும் உள்ளன.இம் மென்பொருளை பெற இங்கே கிளிக் செய்யவும்.
கிடைக்கும் தளம்-www.dimin.net
ஃபைல் அளவு-1.60 எம்பி


Concept by
A.Shanojan
*****************SEND YOUR FEEDBACKS TO shanojan1993@yahoo.com********************

கருத்துகள் இல்லை:

Share With your friends